காவல்துறையினரின் மனிதாபிமானத்திற்கு தலைவணங்குகிறேன்.
வட மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் தங்கி வேலை செய்யும் ஒவ்வொருவரின் பசியைப் போக்க ஏதாவது உதவி செய்யுங்கள் என்று காவல்துறையினர் தொண்டு நிறுவனங்களிடம் கேட்டிருக்கிறார்கள். தன்னார்வலர்களும் தொண்டு நிறுவனத்தினரும் தங்களால் ஆன உதவிகளை சேகரித்து அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று கொடுக்க முடிவு செய்தனர். அவர்களோடு நானும் என்னை இணைத்துக் கொண்டேன். இன்று சோழவரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பொருள்களை தனித்தனியாக பேக் செய்வது, வண்டியில் ஏற்றுவது மக்களிடம் கொண்டு சேர்ப்பது என மூன்று கட்டமாக வேலையை ஆரம்பித்தோம்.
இன்று (8/04) திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி காவல் துறைக்கு உட்பட்ட செங்கல்சூளைகளிலும் அரிசி
மண்டிகளிலும் வேலை செய்யும் 267 வட மாநில சகோதர சகோதரிகளுக்கு 5 கிலோ அரிசி, 3 கிலோ பருப்பு, ஒரு கிலோ எண்ணெய், மிளகாய்த்தூள, மஞ்சள் தூள் உப்பு, கோதுமை மாவு போன்ற மளிகை பொருட்களை காவல் துறையினரின் உதவியுடன் வழங்கினோம்.
உதவி செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
அன்புடன்
ஷெரின்