ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளால் பக்க விளைவு - மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை

புதுடெல்லி


கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மலேரியாவுக்கு பயன்படுத்தும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகளை உட்கொள்ளலாம் என்று கூறப்பட்டது.


இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் லட்சக்கணக்கில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை வாங்கி உள்ளன. மேலும் இந்தியாவில் கொரோனா தடுப்பு பணியில் உள்ளவர்களுக்கு இந்த மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது.


ஆனால் இவற்றை சாப்பிட்டவர்களுக்கு வயிற்று வலி, குமட்டல், ரத்தத்தில் சர்க்கரை குறைவு போன்ற பிரச்சினைகள் இருப்பதாக கூறினார்கள்.


அது சம்பந்தமாக இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது. 35 வயது சராசரி கணக்கில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 10 சதவீதம் பேருக்கு வயிற்று வலி இருப்பதும், 6 சதவீதம் பேருக்கு குமட்டல் இருப்பதும், 1.3 சதவீதம் பேருக்கு ரத்த சர்க்கரை குறைவு இருப்பதும் தெரிய வந்தது.


எனவே இதனால் ஏற்படும் பக்க விளைவு குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் தேவையில்லாமல் இந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.